விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன் – நடிகை சமந்தா!

Actress Samantha has said that she thought I would break up after divorce, but my mental strength is now understood.

விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது  புரிகிறது என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் விமரிசையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்பு ஹைதராபாத்தில் வசித்து வந்தார் சமந்தா. பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய போவதாக தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அதிகாரப்பூர்வமாக இருவரும் தெரிவித்திருந்தனர். இது இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக தற்போது சமந்தா பேசியுள்ளார்.

அதில், உங்களுக்கு மோசமான ஒரு நாள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். அதை புரிந்து கொண்டு உங்கள் கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு விட்டால் உங்கள் வேலை எளிதாகி விடும். நான் ஆரம்பத்தில் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்திருந்தேன். மேலும் எனது விவாகரத்து பிரிவால் நான் நொறுங்கி, இறந்துவிடுவேன் என்று கூட நினைத்தேன்.

ஆனால் நான் எவ்வளவு வலிமையானவள் என்பதை இந்த விவாகரத்து தான் எனக்கு புரிய வைத்துள்ளது. இன்று நான் வலிமையாக இருக்கிறேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையானவள் என்பது எனக்கே இதற்கு முன்பு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.