விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது புரிகிறது என நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் விமரிசையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு ஹைதராபாத்தில் வசித்து வந்தார் சமந்தா. […]