பிகில் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நான் மிகவும் நேசித்தேன்!

George Marion said that the role of this Church Father of mine in the film Bigil is one of the weirdest characters I have ever played

பிகில் படத்தில் என்னுடைய இந்த சர்ச் தந்தை பாத்திரம் நான் நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும் என்று ஜார்ஜ் மரியன்  தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்து ஜா, விவேக், ஜார்ஜ் மரியன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். பெண்களின் கால் பந்து ஆட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிர்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் சாதன செய்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சர்ச் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “பிகில்படத்தில் என்னுடைய இந்த சர்ச் தந்தை பாத்திரம் நான் நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். நான் அதை மிகவும் நேசித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

#பிகில்படத்தில் என்னுடைய இந்த சர்ச் தந்தை பாத்திரம் நான் நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். நான் அதை மிகவும் நேசித்தேன்!pic.twitter.com/xFK1Zba607

unknown node