நான் சாப்பாட்டு பிரியை. எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வேன் : நடிகை ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நேற்று மாதிரியே இன்றும் நடந்தால் அதில் என்ன விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது செய்வேன். அதுதான் சினிமாவில் இத்தனை நாட்களாக என்னை வைத்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆரோக்கியத்துக்கும், உடற்பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுப்பேன் என்றும், நான் சாப்பாட்டு பிரியை, எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வேன்.

நான் சாப்பாட்டு பிரியை. எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வேன் : நடிகை ரகுல் ப்ரீத் சிங்