யாரும் செய்யாத காரியத்தை காமலுக்காக நான் செய்தேன்.! லோகேஷ் வெளிப்படை பேச்சு.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் கமலுடன் பணியாற்றியது குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியது “நான் இயக்குனர் கமல் சார்க்கு மிகப் பெரிய ரசிகன் அவரையே அவரால இயக்க முடியும் “எனக்கு தான் அவர் தேவை, அவருக்கு நான் தேவை இல்ல”, இந்த படத்துல ஒரு எடத்துல கூட அவர் தலையிடல கேட்ட பணம், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், டெக்னாலஜி எல்லாத்தையும் கொடுத்தாரு.

unknown node

நான் தான் 32 நாள் கமல் சார்க்கு மேக்கப் போட்டேன் இது வரைக்கும் வேற எந்த இயக்குனரும் போட்டதில்ல, அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்க ஆசைப்பட்டேன். ஆனா, நான் இயக்குனர்னு கையெழுத்து போட்ட எடத்துல அவர் தயாரிப்பாளர்னு கையெழுத்து போட்டாரு மறக்கவே முடியாது.

unknown node

நான் எப்பவுமே கமல் சாரோட தீவிர ரசிகன் தான். இந்த படத்த பொறுத்த வரைக்கும் ஒரு குழந்தை தீம் பார்க்ல தொலையிர போல தான் நான் இருந்தேன், ஷூட்டிங் நடுவுல அவர்கிட்ட போய் அந்த கதாபாத்திரம் போல பேசுங்க இந்த கதாபாத்திரம் போல பேசுங்கன்னு கேட்டுட்டே இருப்பேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

யாரும் செய்யாத காரியத்தை காமலுக்காக நான் செய்தேன்.! லோகேஷ் வெளிப்படை பேச்சு.!