பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவருமே நெருங்கிய நண்பர்கள். சினிமாவிற்குள் போட்டி இருந்தாலும் கூட இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பது, பிறந்த நாளிற்கு நேரில் சென்று வாழ்த்துவது என நட்புடன் இருக்கிறார்கள். அந்த வகையில், இன்று நடிகர் சல்மான் கான் 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
unknown nodeShahRukhKhan And SalmanKhan [Image Source : Twitter]
அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பார்ட்டி ஒன்றும் நடைபெற்றது. அந்த பார்ட்டிக்கு பல முக்கிய பிரபலங்களும் வருகை தந்தனர். குறிப்பாக அதிகாலை 3 மணிக்கே நடிகர் ஷாருக்கான் வருகை தந்து சல்மான் கானுக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து அன்புடன் முத்தமிட்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeShahrukhKhan Graces SalmanKhan Birthday Bash [Image Source : Twitter]
இந்த வீடியோவை பார்த்த பல தமிழ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இவர்களை போலவே, தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் – விஜய் சந்தித்து தங்களது அன்பை பரிமாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் என ஆசையுடன் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்-அவதூறு பரப்பிய நடிகை மீது வழக்கு…! இரண்டாவது திருமணம் உண்மை…மாரி பட இயக்குனர் அதிரடி ..!
unknown nodeVijay And Ajith [Image Source : Twitter]
இவர்களுடைய ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும். அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.