இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ஜிவியின் தங்கை பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
unknown nodeஇந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தே ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் முடவடைந்த பாடு இல்லை. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறதாம்.
unknown nodeஅதில், சூரி மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோருடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். அடுத்த மாதம் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு அத்துடன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைகிறதாம். அதன்பின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றும் என தெரிகிறது.
unknown nodeமுழுவதுமாக படத்தை நவம்பர்குள் முடித்து படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியீட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவார் என தெரிகிறது.
unknown nodeவாடிவாசல் படத்தை எப்போது தான் தொடங்குவார் வெற்றிமாறன் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் 15 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.