கொம்பன் கார்த்தி நடிக்கும் விருமன்.! யுவன் இசையில் முதல் பாடல் அப்டேட் இதோ..

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி ஷங்கர் நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி ஷங்கர் நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார்.

unknown node

கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், படத்திற்கான முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

கார்த்தி – யுவன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, பிரியாணி ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதால், படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

unknown node