தர்பாருக்கு ரஜினி இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளாரா?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் கடந்த சில நாட்களுக்கு  முன்பதாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 3 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிப்பதற்கு, வரியுடன் சேர்த்து, ரூ.108 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.