சூர்யாவின் ஜெய் பீம் பட வழக்கில் கடும் நடவடிக்கை கூடாது.! உயர்நீதிமன்றம் அதிரடி.!

இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான "ஜெய் பீம்" திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. எந்த

இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. எந்த அளவிற்கு படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதே அளவிற்கு கண்டனங்களும் எழுந்தது.

unknown node

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை படத்தில் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஞானவேல் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேளச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

unknown node

இந்நிலையில், ஜெய் பீம் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது  வேளச்சேரி காவல் நிலையத்தில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

unknown node

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த பட விவகாரம் தொடர்பான வழக்கை ஜூலை 21 தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.