கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெகுநாட்களாக கிடப்பில் இருந்த தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்கிவருகிறார் இந்த படம் பாதி நிறைவடைந்துவிட்டது. இந்த படத்தில் வருண் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
unknown nodeஇப்படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பெரிய ஹிட்டாகி தேசிய விருதும் பெற்ற அந்ததுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்க உள்ளாராம். இப்படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தயாரிக்க உள்ளார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.