தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு பரிசு கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

GV Prakash who awarded the gold medal winner Gomadhi

கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து தான் தடகளப் போட்டியில்  கிழிந்த ஷூவுடன் தான் ஓடினேன் என கூறினார். இவர் கூறியதை கேட்ட பல பிரபலங்கள் உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோமதிக்கு நடிகர் ரோபோ ஷங்கர் ஒரு லட்ச ருபாய் நிதியை பரிசாக கொடுத்து உள்ளார்.தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் கோமதியை நேரில் அவரை சந்தித்துஅவருக்கு ஒரு புதிய ஷூ வாங்கி கொண்டு கொடுத்துள்ளார்.

unknown node