டபுள் டமாக்கா அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

gv prakash

ஜிவி பிரகாஷ் : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, படத்தில் இருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. ட்ரைலரில் கடைசியாக இடம்பெற்ற ஜிவி பிரகாஷ் பாடிய வாரானே தங்கலானே என்ற பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து ஜிவி பிரகாஷ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி, தங்கலான் படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். அதைப்போல, அவர் இசையமைத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் NEEK படம் பற்றிய அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்) படத்தின் முதல் பாடலை தனுஷ் பாடியுள்ளார் எனவும், சீக்கிரம் அந்த பாடலை ரிலீஸ் செய்துவிடுவோமா? என கேட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஜிவி மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனுஷுடன்  இந்த படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின் பாடல்கள் மீதும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தனுஷ் இயக்கி வரும் இந்த NEEK படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ரபியா கட்டூன், வெங்கடேஷ் மேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தினை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்