சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. ஏர் டெக்கான் நிறுவனர் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிநாத் அவர்களின் வாழ்வை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசரில் சூர்யாவின் நடிப்பு மிக அருமையாக இருந்தது எனவும், படத்தின் மேக்கிங் அற்புதமாக இருந்தது எனவும் திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரை போற்று படத்தை டீசரை பார்த்து பாராட்டி எழுதியுள்ளார். கோபக்கார இளைஞராக சூரயா நடித்துள்ளது அற்புதமாக உள்ளது. இப்படத்தை காண ஆவலுடன் உள்ளேன். இப்படத்தை கொடுத்ததற்காக சுதா கொங்காராவிற்கு நன்றி என அந்த ட்விட்டில் பதிவிட்டுள்ளார்.
unknown node