நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார்.
unknown nodeஇந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சந்தானத்தின் அடுத்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeஎம் ராஜேஷ் இயக்கும் படங்களில் இதுவரை சந்தானம் 5 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சந்தானம் &எம் ராஜேஷ் இணையும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.