விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காதுவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், கடைசி விவசாயி ஆகிய படங்கள் டிசம்பரில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் என்ன அண்மையில் கூட நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் ஆகின. வாரம் வாரம் விஜய் சேதுபதி படங்கள் வந்துவிடும். குறைந்தபட்சம் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களாவது வந்துவிடும் என்ற அளவிற்க்கு தான் விஜய் சேதுபதி தனது ரிலீஸ் லைன் அப்பை வைத்து இருப்பார்.
unknown nodeதற்போது மீண்டும் அதே போல , டிசம்பர் மாதம் வரிசைகட்டி தனது படங்களை களமிறக்க உள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது.
unknown nodeஅடுத்து, நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படமும் டிசம்பரில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. அதே போல, மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படமும் டிசம்பரில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
unknown nodeமேற்கூறிய இரண்டு படங்களின் ரிலீஸ் பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.