சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறவில்லை.
unknown nodeThe legend Movie [Image Source: Google]
இந்த நிலையில், படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் “தி லெஜண்ட்” திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என புதிய தகவல் ஒன்று பரவியது.
இதையும் படியுங்களேன்-ஆண்ட்ரியா கூட நிறைய சண்டை போட்ருக்கேன்.. அவர்களுக்கு நிறைய விருதுகள் கொடுக்கணும்.! மிஷ்கின் கோரிக்கை.!
unknown nodeThe legend Movie [Image Source: Google]
ஆனால், தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. எது என்னவென்றால், “தி லெஜண்ட்” படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான சரவணன் அண்ணாச்சி யாருக்கும் கொடுக்க ஆர்வம் காட்டாததால் இந்த திரைப்படம் எந்த ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியிடப்படாது என தகவல்கள் கசிந்துள்ளது.
unknown nodeThe legend Movie [Image Source: Google]
எத்தனைகோடிகள் கொடுத்தாலும் எந்த ஓடிடி நிறுவனத்திற்கும் படத்தை கொடுக்க அண்ணாச்சி தயாராக இல்லயாம். எனவே லெஜண்ட் படம் ஓடிடியில் வெளியாகாது என்பதால் ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் இருக்கிறார்கள்.
unknown nodeLegend Saravana[Image Source: Google]
மேலும், சரவணன் அண்ணாச்சி தி லெஜண்ட் படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அடுத்ததாக ஒரு ரொமாண்டிக் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் அந்த படத்திற்கான அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.