தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா சினிமாவிற்குள் நுழைந்து இன்றுடன் 25-வது வருடத்தை பூர்த்தி செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeசூர்யா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வரும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சூர்யா 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்-கயல் ஆனந்தி இப்படிப்பட்ட பெண்ணா..? அவரே கூறிய சூப்பர் சீக்ரெட்…
unknown nodeஅதன்படி, இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பிரமாண்ட படம் ஒன்று உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக“Project K”என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
unknown node500 கோடி பட்ஜெட்டில், பிரமாண்டமாக இந்த படம் உருவாகவுள்ளதால், ஒவ்வொரு மொழியில் உள்ள பெரிய பிரபலங்களான சூர்யா, துல்கர் சல்மான் மற்றும் மகேஷ்பாபு ஆகியோரை சிறப்பு தோற்றத்தில் படத்தில் இடம்பெறச் செய்ய இயக்குனர் நாக் அஸ்வின் முயற்சித்து வருகிறாராம்.
unknown nodeதமிழில் தற்போது சூர்யா இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு தோற்றத்தில் வந்து அனைவரையும் மிரட்டி இருந்தார் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.