சூர்யாவின் சூப்பர் ஹிட் நாயகியை தட்டி தூக்கிய ஜெயம் ரவி.! புது அப்டேட் இதோ...

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்ற பாஸ்கரன், ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர்

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்ற பாஸ்கரன், ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் எம்.ராஜேஷ். இவர் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

unknown node

இந்த படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியானது.

unknown node

இந்த நிலையில் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க வைக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.

unknown node

அதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இத்தற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.