சிம்புவுக்கு வில்லனாக நடிக்க மறுத்த கௌதம் மேனன்.? காரணம் என்ன.?

Gautham Menon has refused to play Simbu's villain in the film pathu thala.

பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க கௌதம் மேனன் மறுத்துள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஈஸ்வரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .

இந்த படத்தில் சிம்புவிற்கு வில்லனாக கௌதம் மேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது .ஆம் பத்து தல படத்தில் சிம்புவிற்கு வில்லனாக கௌதம் மேனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது அவர் அந்த வாய்ப்பை முதலில் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது கேமராவின் முன் சிம்பு நிகழ்த்தும் மாயாஜாலம் தான் அவர் பத்து தல படத்தில் நடிக்க மறுக்க காரணம் என்று கௌதம் மேனன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.