சூர்யாவின் அருவா படத்தின் வில்லன் யார் தெரியுமா.? செம மாஸ்ஸான தகவல்.!

சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் அருவா படத்தில் கைதி பட வில்லனான அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் அருவா படத்தில் கைதி பட வில்லனான அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஹரி இயக்கத்தில் டி. இமான் இசையமைப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் அருவா. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷி கன்னா முதல்முறையாக சூர்யாவுடன் இணைந்து ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இதனிடையே சூர்யாவிற்கு வில்லனாக நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும்பியதை அடுத்து, அர்ஜுன் தாஸ் அருவா படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தியின் கைதி படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும், ஹீரோவாக அந்தகாரம் படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு முடிந்த பின்னர் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.