ஹீரோவிலிருத்து வில்லனாக களமிறங்கும் பிக்பாஸ் ஆரவ்.! அதுவும் இந்த முன்னணி நடிகருக்கு.!

It has been reported that Big Boss will play the famous Aarav villain in the movie starring Udhayanidhi Stalin.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஆரவ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் படத்திலும் , அருண் ராஜா காமராஜ் இயக்கும் ரீமேக் படமான “ஆர்டிக்கிள்15” படத்திலும் நடிக்கிறார்.தொடர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தாலும் அதே நேரத்தில் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.அவ்வாறு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஆரவ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தில் நிதி அகர்வால், கலையரசன் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.45% படப்பிடிப்பை முடித்துள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பானது சட்டமன்றத் தேர்தலுக்கு பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.