சுடச்சுட ரெடியாகும் 'குட் பேட் அக்லி'... வெளிவந்தது அசத்தலான அப்டேட்!

அஜித் படம் வருமா என காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூசாக Good Bad Ugly பொங்கல் தினத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Good Bad Ugly

சென்னை :ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படமும், ஆதிக் ரவிச்சந்தி இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் எந்தப் படம் முதலில் திரைக்கு வருகிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில், வரும் பொங்க லுக்கு குட் பேட் அக்லி’ படம் கிரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தங்களது வெளிநாட்டு விநியோகஸ் தர்களிடம், வரும் ஜனவரி 10ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, ஸ்பெயின் நாட்டில் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு முடிந்தவுடன் இந்தியாவுக்கு வரும் படக்குழு, இங்கு சில காட்சிகளைப் படமாக்குகிறது.

இந்நிலையில், இப்பொது நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் அஜித் நாளை தனது காட்சிகளை நிறைவு செய்கிறாராம். நவ.24 ஆம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்த,  நவ.27ஆம் தேதி முதல் அஜித்தின் கார் ரேஸிங் கம்பெனி தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளவுள்ள நிலையில், அஜித்தும் இதில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.