மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு தெரிந்த முகமாக மாறியுள்ளார் நடிகையும், சினிமா நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். இவர் பேசிய விதமும், நடந்துகொண்ட விதமும் பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் அசவுகரிய சூழல் உருவானதால் நெகட்டிவ் விமர்சனங்களோடு வெளியேறினார்.
unknown nodeஇந்நிலையில் காயத்ரி ரகுராம் புதிய சர்சை ஒன்றில் சிக்கியுள்ளார். சென்னை திரு.வி.க.பாலம் பகுதியில் நேற்றிரவு மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் அவருக்கு ரூ.3500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.