ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கவின்!

A post shared by Kavin M (@kavin.0431) on Sep 30, 2019 at 7:46am PDT

கவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கவினுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பின் மக்களின் பேராதரவு மிகவும் அதிகமாக இருந்தது.பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த கவின் ஈழத்து பெண்மணியான லொஸ்லியாவை காதலித்து வந்தார். இதனால் சில சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில், கடந்த வாரம் கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதனையடுத்து, கவின் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது பணத்திற்கும், புகழுக்காகவும் தான் என்றும், தற்போது குடும்பத்தை பார்த்துக் கொள்ளவது தான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.மேலும், ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்கும் விதத்தில் நடத்துக் கொண்டிருந்தாள், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

unknown node