ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள ‘காத்தோடு’ என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், அதனை கபிலன் எழுதியுள்ளதாகவும், விரைவில் அந்த பாடல் வெளிவரும் என்றும் ஜிவி கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்திலுள்ள பாடல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node