குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஆட்டம் போடும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், காதலர் தினத்தன்று, மாஸ்டர் படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இப்பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று, ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், தாய்லாந்து பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகள் குட்டிக்கதை பாடலுக்கு ஆட்டம் போடும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node