அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
unknown nodeVijay and Ajith [Image Source: Google ]
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவுள்ளதாக நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் சொல்லப்பட்டு வந்தது.
இதையும் படியுங்களேன்-அடேங்கப்பா இவ்ளோ பெருசா..? அதுல்யாவின் புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.!
unknown nodeTirupur Subramaniam [Image Source: Google ]
இந்த தகவல் உண்மையா இல்லையா என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய ஒரு பேட்டியில் “வாரிசு” மற்றும் “துணிவு” பொங்கலுக்கு வெளிவருகிறது என்பது உறுதியான தகவல்தான். “துணிவ” ஜனவரி 12 (வியாழன்) அன்றும், ‘வாரிசு’ ஜனவரி 13 (வெள்ளி) அன்றும் வெளியாகிறது. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் இரண்டிற்கும் சமமான திரையரங்குகள் நிச்சயம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
unknown nodeஇரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் அஜித் -விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும், விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் – விஜய் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.