முதலில் 'அஜித்' அடுத்து 'விஜய்'.! வெங்கட் பிரபவின் வித்தியாசமான சாதனை.!

சென்னை : அஜித் மற்றும் விஜய் இருவருடன் இணைந்து நடித்து இருவருடைய படங்களை இயக்கியவர் என்ற வித்தியாச சாதனையை வெங்கட் பிரபு படைத்துள்ளார்.

ajith and venkat prabhu vijay

இயக்குனர் வெங்கட் பிரபு படங்களை இயக்கி அந்த படங்கள் அதிகம் வசூல் செய்து சாதனை படைப்பது போல அவரே ஒரு வித்தியாசமான சாதனை ஒன்றைச் செய்துள்ளார். அது என்ன சாதனை என்று இப்போது, இந்த பதிவில் பார்க்கலாம். அது என்ன சாதனை என்றால், விஜய் மற்றும் அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்து அவர்களுடைய படங்களை இயக்கம் செய்த இயக்குனர் என்ற சாதனை தான்.

குறிப்பாக, வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்குவதற்கு முன்பு ஜீ படத்தில் அஜித்திற்கு நண்பனாக உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இயக்குனரான வெங்கட் பிரபு, அஜித்தை வைத்து மங்காத்தா படத்தினை இயக்கினார். அஜித்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்தும் வெங்கட் பிரபு கோட் படத்தை இயக்கியுள்ளார்.

கோட் படத்தை இயக்குவதற்கு முன்பே வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைந்து சிவகாசி படத்தில் நடித்திருந்தார் . சிவகாசி படத்தில் விஜயின் தங்கை கணவராக வெங்கட் பிரபு நடித்திருந்தார். எனவே, திரைத்துறையில், முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் இருவருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து இரண்டு பேரை வைத்து படம் இயக்கிய இயக்குனர் என்ற வித்தியாச சாதனையைப் படைத்துள்ளார்.

வெங்கட் பிரபுவுக்கு முன்னதாக, இயக்குனர் பேரரசு விஜய் மற்றும் அஜித் ஆகியோர் படங்களை ஆரம்பக் காலத்தில் இயக்கி இருந்தாலும் அவர் வழக்கமாக அணைத்து படங்களில் வருவது போல, கேமியோ கதாபாத்திரத்தில் வந்துவிட்டுச் சென்று இருப்பார். ஆனால், படத்தில் பயணம் செய்யும் ஒரு கதாபாத்திரமாகவே, அஜித் மற்றும் விஜய் படங்களில் நடித்து இருவரையும் வைத்து படம் இயக்கியது என்றால் வெங்கட் பிரபு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.