என் புருஷனை பார்க்கணும் போல இருக்கு – அர்ச்சனாவிடம் புலம்பிய அனிதா!

Anita leaned over Archana and said last night that it was as if Archana's sister was looking at my husband.

அர்ச்சனா அக்கா எனது புருஷனை பாக்கணும் போல இருக்கு என அனிதா அர்ச்சனாவின் மீது சாய்ந்து நேற்றிரவு கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 75 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 75 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும், பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பாகவே இரண்டு வாரங்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தினரை கடந்த 100 நாட்களாக பிரிந்து தான் இருக்கின்றனர்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொஞ்ச நாட்கள் தனது கணவர் பற்றியே பேசிக் கொண்டிருந்தார் அனிதா என்பது அனைவருக்குமே தெரியும். அனிதா எதையேனும் யோசித்தால் உடனே அழுது விடும் குணம் கொண்டவர். இந்நிலையில் நேற்று அனிதா அர்ச்சனா மீது சாய்ந்து எனக்கு என்னுடைய கணவரை பார்க்க வேண்டும் போல இருக்குது அர்ச்சனா அக்கா என அழுதுள்ளார். ரசிகர்கள் ஒருபுறம் கலாய்த்தாலும், மறுபுறம் ஆதரவாக பேசி வருகின்றனர். ஏன் என்றால் அனிதா அர்ச்சனாவிடம் கூறுகையில், எனக்கு எனது கணவரை தவிர வேறு யாருமே கிடையாது உங்களுக்கு தெரியுமல்லவா எனக் கூறினார்.