டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Default Image

நடிகர் கலையரசன், நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டைட்டானிக்”. இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காளி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்பி திரையரங்குகள் திறந்து பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. தற்போது மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்