டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் கலையரசன், நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டைட்டானிக்”. இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காளி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக … Read more

டைட்டானிக் படத்திற்கு பின் அதிகம் கேலி செய்யப்பட்டேன் – கேட் வின்ஸ்லெட்

என் வாழ்வில் இந்த படத்திற்கு பின் ஏராளமான உடல் ரீதியான அவமானங்களை எதிர் கொண்டதோடு, அதிகம் கேலி செய்யப்பட்டேன் என டைட்டானிக் படத்தின் நாயகி தெரிவித்துள்ளார்.  ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டைட்டானிக்’. இப்படமானது அட்லாண்டிக் பெருங்கடலில் 1912 ஆம் ஆண்டு மூழ்கிய ஒரு கப்பலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில … Read more

ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் மெட்ராஸ் புகழ் நடிகரின் படம்.!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து ஓடிடியில் நடிகர் கலையரசனின் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது .இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.அதில் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பல … Read more

மத்திய அரசு கூறுவது, டைட்டானிக் கேப்டன் பயணிகளுக்குச் சொல்வது போன்று உள்ளது – ராகுல் காந்தி விமர்சனம்.!

மத்திய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது, பயணிகள் பீதி அடைய வேண்டாம் என டைட்டானிக் கேப்டன் பயணிகளுக்குச் சொல்வது போன்று உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. The Health Minister saying that the Indian Govt has the #coronavirus crisis under control, is like the Capt of the Titanic … Read more

நம்ம ஊரு டைட்டானிக்! இவுங்தான் ஹீரோ – ஹீரோயின்!!

பீட்சா, சூதுகவ்வும், இறுதிசுற்று, காதலும் கடந்து போகும் என பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமார். அடுத்ததாக தயாரிக்க உள்ள திரைப்படம் டைட்டானிக். இப்படத்தில் மெட்ராஸ் கலையரசன் ஹீரோவாகவும், கயல் ஆனந்தி ஹீரோயினாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தினை ஜானகி ராமன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வெளியாக உள்ளது. விரைவில் இதன் வெளியீட்டு பற்றிய அறிவிப்பு வெளிவரும். DINASUVADU