குஷியில் ரசிகர்கள் : இந்த வாரம் தல ட்ரீட்... அடுத்த வாரம் சிம்பு ட்ரீட்.!!

The movie Billa starring Ajith on Friday this week and the movie Manmadhan starring Simbu on Friday next week will be re-released in Tamil.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அஜித் நடித்த பில்லா திரைப்படமும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சிம்பு நடித்த மன்மதன் திரைப்படமும் தமிழக்தில் ரீ ரிலீசாக உள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல புதிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது.

பில்லா

அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது நாளை தமிழக்தில் ரீ ரிலீசாக உள்ளது இதனால் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெட் எடுத்து படத்தை பார்க்க காத்துள்ளார்கள்.

unknown node

மன்மதன்

இந்த நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை பில்லா திரைப்படம் வெளியாவது போல் கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இந்த படத்தை அவரே இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 19 ஆம் தேதி தமிழகத்தில் ரீ ரிலிஸாக உள்ளதால் சிம்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

unknown node