தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், சென்னை கோகுலம் ஸ்டூடியோ, ஓ.எம்.ஆரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், நாளை 48-வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டுள்ளது.
unknown nodeஅதன்படி படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் விஜய் கெத்தாக கோட்சூட் போட்டுகொண்டு அமர்ந்து இருப்பது போல கட்டப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
unknown node