Ajith kumar: சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் நேற்று வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்ததாகவும், இதனையடுத்து நடந்த 4 மணிநேர தீவிர அறுவை சிகிச்சையில், மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
READ MORE –நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.!
இந்த அறுவை சிகிச்சைக்காக மதுரை மற்றும் கேரளாவில் இருந்து 2 மருத்துவர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நேற்றைய தினம் அவர், வழக்கமான உடல்நல பரிசோதனையை முடித்துக்கொண்டு மாலை வீடு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் எப்படி மாலை வீடு திரும்பிருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
READ MORE –அப்போ புரியல இப்போ புரியுது! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை வாங்க போட்டி போடும் ஓடிடி நிறுவனங்கள்!
பொதுவாக, அஜித் குறித்து ஏதாவது வதந்தி மற்றும் சர்ச்சைகள் பரவினாலோ அல்லது அஜித் அதிகார்பூர்வமாக ஏதேனும் அறிவிக்க விரும்புகிறார் என்றால், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள மூலம் வெளிடுவார். இந்த நிலையில், அஜித்தின் உடல் நலம் குறித்து நேற்றைய தினத்தில் இருந்து இப்போது வரை மவுனம் காத்து வருகிறார். இதனால், அஜித்தின் உடல் நலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். மேலும், அறுவை சிகிச்சை செய்தி உணமையாக இருக்க கூடாது, வதந்தியாக இருக்க வேண்டும் என வேண்டி வருகிறார்கள்.
READ MORE –அடேங்கப்பா! ‘தங்கலான்’ ஓடிடி விலை இத்தனை கோடியா? இப்பவே கண்ண கட்டுதே!!
unknown nodeஇதற்கிடையில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இப்பொது சென்னையில் இருக்கும் அவர், படப்பிடிப்புஅஜர்பைஜானில் நடந்து வந்து வரும் நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
