நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த பிரபல நடிகை ராணி பாலியல் புகார் …!துணை நடிகர் மீது பாலியல் புகார் …!
பிரபல திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகை ராணி , சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் நடிகைராணி. துணிக்கடை விளம்பரத்தில் நடித்தபோது சண்முகராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் நடிகைராணி.
இவர் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராணி.அதேபோல் துணை நடிகர் சண்முகராஜன் சண்டக்கோழி,காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆவார்.