நான்காவது திருமணம் செய்த நான்கு நாளில் விவாகரத்து செய்த பிரபல நடிகர்

This news gives information about Famous actor who divorced in four days after the fourth marriage

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான நிக்கோலஸ் கேஜ் 55 வயதான இவர் ஹாலிவுட்டில்  பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.தனது 32 வது வயதில் “லீவிங் லாஸ் வேகாஸ்” என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

நிக்கோலஸ் கேஜ்க்கும் , மேக்கப் கலைஞராக இருந்த எரிகா கிக்கேக்கும் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது.இவர்கள் திருமண நடந்த நான்கு நாள்களில் விவாகரத்து செய்த சம்பவம் பலருக்கும் பெரும்  அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருமண நடந்த 4 நாட்களில் பிரிவதாக முன்பே அறிவித்தனர். தற்போது நிக்கோலஸ் கேஜ்டம், எரிகா கிக்கே  ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்த வழக்கில் செலவாகும் மொத்த செலவையும் நிக்கோலஸ் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

நிக்கோலஸ் 1995 ஆண்டு பாட்ரிசியா அரியூட்ட என்பவரை முதல் திருமணம் செய்தார். இவரை 2001-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டு.2002-ம் ஆண்டு லிசா மேரி ப்ரேஸ்லெய் என்பவரை  திருமணம் செய்தார்.இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004-ம் ஆண்டு  விவாகரத்து செய்து பிரித்து விட்டனர்.

நான்காவது திருமணம் செய்த நான்கு நாளில் விவாகரத்து செய்த பிரபல நடிகர்