விஸ்வாசம் சாதனையை முறியடித்த மாஸ்டர்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. வெளியாகி 50 நாட்களை கடந்தும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டு திரையரங்குகள் மூடப்பட்டது, நீண்ட நாட்களுக்கு பிறகு மாஸ்டர் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

இந்த மாஸ்டர் திரைப்படம் வசூலில் மட்டும் சாதனைப்படைக்காமல் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆம், மாஸ்டர் படம் வெளியாகி 50 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் 134 திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும் இதைபோல் விஸ்வாசம் திரைப்படம் 50 நாட்களில் தமிழகத்தில் 124 திரையரங்குகளில் ஓடியது என்பதால் அதைவிட அதிமான திரையரங்குகளில் மாஸ்டர் படம் ஓடுகிறது இதன் மூலம் மாஸ்டர் படம் விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.