பொங்கலையொட்டி சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! முக்கிய பிரபலம் ட்வீட்!

Producer Suresh Kamatchi tweeted that the motion poster for the conference movie will be released on Jan. 14 at 4:05 p.m.

மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், ஜன.14-ம் தேதி, 4:05 மணியளவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்த படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஜே.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ் மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பிரபாலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், ஜன.14-ம் தேதி, 4:05 மணியளவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், ஜன.14ம் தேதி சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

unknown node