திரையரங்குகளில் "டாக்டர்".! கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின் படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற குழம்பம் ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.