சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு “பத்து தல” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ‘ஏஜிஆர்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். இந்த படம் கடந்த 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
unknown nodeஇந்த படத்தில் கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். “ஸ்டூடியோ க்ரீன்” சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படதிற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
unknown nodeபடத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில், விரைவில் அது முடித்துவிட்டால் படம் இந்த வருடம் தீபாவளி அல்லது, டிசம்பர் இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeஇந்த நிலையில், தற்போது முதலில் இந்த படத்தில் ‘ஏஜிஆர்’ கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது சிம்பு இல்லயாம். அதற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டது நடிகர் அஜித்தானம் ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்கவில்லையாம், இதனை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவே நேர்கானலில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.