சென்னை :GOAT படம் எந்த அளவுக்கு பேசப்பட்டு வருகிறதோ அதே அளவுக்கு படத்தில் நடித்தவர்களுடைய கதாபாத்திரம் பற்றியும் பேசப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்னேகா நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
வசீகரா படத்திலே இவர்களுடைய ஜோடி பெரிய அளவில் பேசப்பட்டு பலருக்கும் பிடித்த காம்போவாக இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பின் GOAT படத்தின் மூலம் ஸ்னேகா விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்திலும் இவர்களுடைய ஜோடி இப்போது இருக்கும் 2K கிட்ஸ்களை கூட கவரும் வகையில் அமைந்துள்ளது.
ஸ்னேகாவும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். இந்த சூழலில், அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவலை வெங்கட் பிரபு உடைத்துள்ளார். அதன்படி, இந்த படத்தில் ஸ்னேகாவுக்கு பதிலாக முதலில் நயன்தாராவை தான் நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்தாராம்.
ஆனால், எதோ சில காரணங்களால் அது செட் ஆகாமல் அப்படியே தள்ளிக்கொன்டே சென்றதாம். பிறகு தான் இந்த கதாபாத்திரத்திற்கு ஸ்னேகா தான் சரியாக இருப்பார் என முடிவெடுத்து அவரை நடிக்க வைத்தாராம். பிறகு படம் வெளியான பிறகு கூட நயன்தாராவே வெங்கட் பிரபுவுக்கு கால் செய்து இந்த கதாபாத்திரத்தில் ஸ்னேகாவை தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது எனவும் பெருந்தன்மையுடன் கூறினாராம்.
இந்த தகவலை சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெங்கட் பிரபுவே தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமின்றி, மைக் மோகன் கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சுவாமியும் மாதவனும் ஆரம்ப தேர்வில் இருந்தனர் எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
