மறைந்தும் வாழும் டேனியல் பாலாஜி...என்ன செய்தார் தெரியுமா?

Daniel Balaji: மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

Daniel Balaji

Daniel Balaji:மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு 1 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சற்றுநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவு செய்தி தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் டேனியலின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்தும் பிறர் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளார். தானத்தில் சிறந்த தானம் கண் தானம் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

ஆம், அவரின் கண்கள் பார்வையில்லாத ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. உயிருடன் இருக்கும்போதும் முடியாதவர்களுக்கு உதவி செய்த அவர், மறைந்த பிறகும் தனது கண்களை தானமாக  வழங்கி பிறரின் வாழ்க்கையில் ஒளிவீச செய்துள்ளார். அவர் மறைந்தும் ஒருவருக்கு கண் தானம் செய்து அனைவரது மனதிலும் வாழ்கிறார்.