விஸ்வரூப வெற்றி....'லத்தி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் விஷால் நடிப்பில்  இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லத்தி'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில்  இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

unknown node

Laththi From Today [Image Source: Twitter ]

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தை பார்த்த பலரும் விஷாலின் நடிப்பு அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-துணிவு படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா..? இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ் தகவல்.!

unknown node

Laththi [Image Source: Google ]

மேலும் சிலர் படத்தின் ஆக்சன் காட்சிகள் அருமையாக இருப்பதாகவும், படத்தின் கதை சுமாராக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். எனவே,  ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

unknown node

Laththi [Image Source: Twitter ]

அதன்படி, இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் வெளியான முதல் 1.25 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் படம் கிட்டத்தட்ட 2.5 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாட்கள் கிருஸ்துமஸ் விடுமுறை என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.