அப்டேட்டே வேண்டாம் ஆள விடுங்க! விடாமுயற்சி போஸ்டரால் அப்செட்டான ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிகில் நாயர் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தற்போது வெளியாகியுள்ளது.

Vidaamuyarchi poster

சென்னை :அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிகில் நாயர் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தற்போது வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்திற்கு பிறகு அஜித் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை என்பதால் விடாமுயற்சி படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, த்ரிஷா, அர்ஜுன், நிகில் நாயர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை அக்டோபர் மாதம் வெளியிடபடக்குழு திட்டமிட்டு வருகிறது.

unknown node

Nikhil Nair in Vidaamuyarchi / @SureshChandraa

இதற்கிடையில், அடிக்கடி படத்தில் இருந்து அப்டேட்டுகளை படக்குழு வாரி வழங்கி வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக படத்தில் நடிக்கும் பிரபலங்களுடைய போஸ்டர்களை படக்குழு வெளியீட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிகில் நாயர் தோற்றம் குறித்த போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டர் வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியான போஸ்டர்-ஆ எனவும், ‘இதோ உங்களுக்காக அசர்பைசான் ரோட்டில் இருந்து  என்றும், இனிமே அப்டேட் வேண்டாம் ஆள விடுங்க டா சாமி என்பது போலவும் கூறி வருகிறார்கள். மேலும், படத்திலிருந்து அடுத்த அப்டேட்டாக ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.