இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு இளையராஜா -ரஜினிகாந்த அஞ்சலி செலுத்தினர்

this news gives information about Director Mahendiran paid the body to Ilaiyaraaja -Rajinikantha paid tribute-iyakunar mahendranku

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு  திரைப்பிரபலங்கள் இளையராஜா ,மணிரத்தினம் ,பாக்கியராஜ் , சுஹாசினி ஆகியோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும்  வலம் வந்தவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இவர் சமீப காலமாக பல படங்களில் ஒரு நடிகராக வலம் வந்தவர். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் பிரபலமான நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரில்லாமல் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டார்.இன்று காலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு  திரைப்பிரபலங்கள் இளையராஜா ,மணிரத்தினம் ,பாக்கியராஜ் , சுஹாசினி ஆகியோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தி பின்பு பேசிய ரஜினிகாந்த், தனக்குள் இன்னொரு ரஜினிகாந்த இருப்பதை வெளி கொண்டு வந்தவர் இயக்குனர் மகேந்திரன்.

என்னுடைய நெருங்கிய நண்பன் எனவும் ,மகேந்திரனின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாகும் எனவும் , மகேந்திரனின் குடும்பத்திற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்தார்.

unknown nodeunknown node