சந்திரமுகி பட டைட்டிலை ஒரு கோடி கொடுத்து வாங்கியதா தயாரிப்பு நிறுவனம்.!

It has been reported that Sun Pictures has bought the title of the movie Chandramuki starring Raghava Lawrence for one crore rupees.

சந்திரமுகி படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயண வாழ்க்கையில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி.இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.பி.வாசு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார் . மேலும் 100 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பிற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சிவாஜி ஃபில்ம்ஸிடம் உள்ள சந்திரமுகி படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

சந்திரமுகி பட டைட்டிலை ஒரு கோடி கொடுத்து வாங்கியதா தயாரிப்பு நிறுவனம்.!