அனிருத் குரலில் வெளியாக போகும் தனுஷ் பட பாடல்... இது ரெம்ப ஸ்பெஷல்..

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

unknown node

இதனை தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தனுஷிற்கு ரொம்ப பிடித்த பாடலாம். இந்த பாடலை அனிருத் பாட, எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளாராம்.