பைக்கால் வந்த வினை…தனுஷ் மகனுக்கு அபராதம் விதிப்பு!

தனுஷின் மூத்த மகன் யாத்ரா இரு சக்கர வாகனத்தில் செல்லும் அவரது சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விதிமீறலில் ஈடுபட்ட தனுஷ் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு யாத்ரா, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் சூப்பர் பைக்கில் செல்வதை கண்ட ரசிகர்கள், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் காரணமாக அது விவாதத்தை எழுப்பியது. தனுஷின் மகன் யாத்ராவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், அவருக்கு இன்னும் பதினெட்டு வயது கூட ஆகவில்லை என்றும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும், 18 வயது நிறைவடையாத சிறுவன் எப்படி வாகனம் ஓட்டலாம் என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இவ்வாறு கேள்வி எழுப்பிய நெட்டிசங்கள் சமூக வலைத்தளங்களில், போக்குவரத்து துறை அதிகாரிகளையும் டேக் செய்திருந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் பைக் ஓட்டியதற்காக யாத்ராவுக்கு குற்றத்திற்காக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
வி.ஐ.பி திரைப்படத்தை எடுக்க காரணமே தனுஷ் பயன் தான்! அடடா அப்பா மேல எவ்வளவு பாசம்!
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து செய்தனர். இருந்தாலும், இருவரும் தங்கள் மகன்களை சிறப்பாக கவனித்து வருகிறார்கள். இருவரும் தனித்தனியே தங்களுடன் பொது விழாக்களுக்கு அழைத்து செல்கின்றனர்.
சமீபத்தில், யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் தனது தாயார் ஐஸ்வர்யா மற்றும் அவர்களது தாத்தாவான ரஜினிகாந்துடன் தீபாவளி கொண்டாடினார். மேலும் அவரது தீபாவளி கொண்டாட்ட படங்கள் சமூக வலைத்தளங்ளில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025