தனுஷின் மூத்த மகன் யாத்ரா இரு சக்கர வாகனத்தில் செல்லும் அவரது சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விதிமீறலில் ஈடுபட்ட தனுஷ் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் பள்ளியில் பயின்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு யாத்ரா, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் சூப்பர் பைக்கில் செல்வதை கண்ட ரசிகர்கள், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் காரணமாக அது […]
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல். சென்னையில் மாண்டஸ் புயலால் காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புயல் காரணமாக, மிக மிக அவசியமான காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
சிசிடிவி-யில் உள்ள முகத்தை கண்டுபிடிப்போருக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல்துறை அறிவிப்பு. குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பயன்படும் சிசிடிவி காட்சிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, ஒரு பரிசு போட்டியை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் விவரங்கள், முகங்களை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதால் காவல்துறை இதுபோன்ற அறிவிப்பை அறிவித்துள்ளது. இரு கட்டங்களாக […]
இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் […]
நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் […]
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. சென்னையில் வரும் 23 தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை […]
போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி துவாலா கவுன் நகரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக காவலர் காரை நிறுத்தியுள்ளார். ஆனால் காரை ஒட்டிய ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வழியில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி வேகமாக சென்றுள்ளார். இதனையடுத்து, காரின் முன் பக்கத்தில் சிக்கிக்கொண்ட காவலர், சில மீட்டர் தூரம் தொங்கியவாறு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் […]
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க சொன்னாலும், காவலர்கள் அனைவருமே ரோட்டில் தான் நிற்கின்றனர். இந்த காவலர்களுக்கு சரியான பாதுகாப்பு மறைவிடம் கிடைப்பதில்லை. மக்களுக்காக தன்னலம் மறந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை மயிலாப்பூரில் பணியில் இருந்த அருண் காந்தி எனும் இளம் வயது போக்குவரத்துக்கு காவலர் ஒருவர் நேற்று மதியம் 3. 15 மணி அளவில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக […]